10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்
பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு (எஸ்எஸ்எல்சி) கடந்த மார்ச் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடந்தது. இதில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோர் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் தேர்வுத் துறை அலுவலகத்தில் வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனுக்குடன் தேர்வுத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிக் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதையடுத்து, பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவ மாணவியர், தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியோர் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய, தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வின் மதிப்பெண்கள் தொடர்பாக மறு கூட்டல் செய்ய விரும்புவோர் இன்று முதல் 28ம் தேதி வரை பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை அதே மையங்களில் பணமாக செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment