வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, June 20, 2016

Today Health Tips | நடைபாதி எடைபாதி

நடைபாதி எடைபாதி என்பது புதுமொழி. நீங்கள் ஒவ்வொரு நாளும் எந்தெந்த வகையிலெல்லாம் நடக்கிறீர்கள் என்பதை பொறுத்த்தான் உங்கள் எடை குறைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


 காலை வாக்கிங் : தினமும் காலையில் 30நிமிடங்களுக்கு நடப்பது கட்டாயம். இதில் உங்கள் இதயத்துடிப்பு அதிகரித்துஅதிகமான கலோரிகளை எரித்துவிடும். மேலும் உடல் சுறுசுறுப்படையும். நாள் முழுவதும் உற்சாகத்துடன் பணிபுரிய உதவிடும் என்பதால்அன்றைய தினம் முழுவதும் கலோரிகளை பலவகையில் விரைவாக எரிக்க தேவையான புத்துணர்ச்சி கிடைத்திடும்.

செல்போன் வாக்கிங் : செல்போனில் பேசுகிறீர்களா?ரோடு மற்றும் தண்டவாளம் போன்ற ஆபத்தான பகுதிகளை தவிர மற்ற பாதுகாப்பான இடங்களில் செல்போனில் பேசும்போது நடந்துகொண்டே பேசுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் போன் பேசுகிறீர்கள் என்றால் நினைத்து பாருங்கள். மேலும் இந்த நடையில் பேச்சின் சுவாரஸ்யத்தில் அலுப்பு தெரியாது.

வேலைக்கு நடுவே வாக்கிங் : சிட்டிங் ஜாப் எனப்படும் அமர்ந்து பணிசெய்வோர் அவசியம் செய்ய வேண்டியது இது. இதனால் முதுகு தண்டுவடம் நேராக இருக்க உதவுவது மட்டுமின்றிஉடற்பருமன் ஏற்படாமலும் தடுத்துவிடலாம். பணியிலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஷாப்பிங் வாக்கிங் : வாரம் ஒரு முறையாவது பெரிய சூப்பர் மார்க்கெட்  சென்று வாருங்கள். அதிகம் பொருள் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. சந்தையில் என்ன வந்திருக்கிறது எத்தனை தள்ளுபடி என்பதை தெரிந்துகொள்வதை பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் அதே நேரத்தில் ஒருமணிநேர நடை கிடைக்கும்.
கடை வாக்கிங் : வீட்டருகே உள்ள கடைகளுக்கு சென்றால் கூட நடந்தே செல்லுங்கள். கடை வீதிகளுக்கு செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். மார்கெட்டுக்குள் நடங்கள். குறைந்த விலையில் பொருட்களும் கிடைக்கும்.
உடம்பும் குறையும்.
பொழுதுபோக்கு  வாக்கிங் : கடற்கரைகோயில்கள்,ஆற்றங்கரைபாலத்தில் காற்று வாங்க செல்வது,பொழுதுபோக்கு பூங்காக்கள்கண்காட்சி/பொருட்காட்சிகளுக்கு அவ்வப்போது செல்லுங்கள். கால்கள் நடக்கும்மனதுடன் சேர்ந்து உடலும் புத்துணர்ச்சி பெறும். வாழ்வில் இத்தகைய நடைகள்,நல்ல துõக்கத்தையும் பசியையும் தரும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment