வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, April 13, 2017

ஆதார் - பான்கார்டு இணைப்பு: 10 அம்சங்கள்


    ஆதார் எண் மற்றும் பான் கார்டு விவரங்களை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.


      இதில் ஏற்படும் குளறுபடிகளை நீக்க, சில வழிமுறைகளையும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன் 10 முக்கிய அம்சங்கள்:
1.நாடு முழுவதும், 111 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 25 கோடி பேர் மட்டுமே, நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை பெற்றுள்ளனர். இவர்களில், 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர். 2.ஆதார் எண் விவரங்களையும், பான் கார்டு விவரங்களையும் இணைக்கும் பணியை, 1.08 கோடி பேர் மட்டுமே இதுவரை முடித்துள்ளனர். 3.கறுப்பு பண ஒழிப்புக்கு இது மிகவும் உதவும் என்பது வருமான வரித்துறையின் எண்ணம். அதற்காகவே இந்த ஏற்பாடு. 4.ஆதார் எண் அட்டையில், பலருக்கும் முழு பெயரும் இருக்காதுஇனிஷியல் மட்டுமே இருக்கும். ஆனால், பான் கார்டில் முழு பெயரும் இருக்கும். இதுபோன்ற நிலையில், ஆதார் எண்ணுக்கான இணைய தளம், பான் கார்டு விவரங்களை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்ளாது; ஆதாரம் தேவை எனகேட்கும். 5.இதுபோன்ற சூழ்நிலையில், பான் கார்டை ஸ்கேன் செய்து, ஆதார் இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யலாம். பான் கார்டை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஆதார் எண் நிர்வாகத்திடம் வருமான வரித்துறை கூறியுள்ளது. 6.பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்து இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்து இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு தரப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி விவரம் ஒன்றாக இருந்தால் தான் பிரச்னை தீரும். 7.வெவ்வேறு பெயர்களை பதிவு செய்துள்ள பெண்களுக்கு மேலும் ஒரு தீர்வு முன் வைக்கப்படுகிறது. வருமான வரி தாக்கலின் போது ஓ.டி.பி.,அதாவது ஒரு முறை பாஸ்வேர்டு, அவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த மொபைல் எண், இரண்டு தரப்பிலும் ஒன்றாக இருந்தால் சிக்கல் தீர்ந்து விடும்.8.இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ஆதார் எண் பதிவின் போது மொபைல் போன் எண் தகவலை தந்து இருக்க மாட்டார்கள். ஆதார் இணைய தளத்திற்கு சென்று மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய முயன்றாலும், அதற்கான சாப்ட்வேர் அனுமதி அளிப்பது இல்லை.(www.aidedpkm.blogspot.com) 9.இதுபோன்ற சூழ்நிலையில், அருகில் உள்ள ஆதார் அலுவலகம் அல்லது ஏஜென்ட்டிடம் சென்று, போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அப்போதும் ஆதார் இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை. இதனால், மொபைல் எண்ணை பதிவு செய்வது, விலாசத்தை மாற்றுவது எளிதில் நடப்பதில்லை.10. சிலருக்கு பான் கார்டில் முழு பெயர் இருக்காது. அதுபோன்ற பான் கார்டை பதிவேற்றம் செய்தால், ஆதார் எண்ணிற்கான இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற நேரத்தில், வருமான வரித்துறை அலுவலகத்தை அணுகி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment