வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, April 26, 2017

187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்.
187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல் | நாடு முழுவதும் 2022-ம் ஆண் டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சென்னை போரூர் ராமச் சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் விழாவுக்கு தலைமை தாங்கி னார். துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சிறந்து விளங்கிய மாணவ - மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி உமா ரவிசங்கர் 5 தங்கப் பதக்கங்களை பெற்றார். வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் 365 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: கொல்கத்தா மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ம் ஆண்டு தொடங் கப்பட்டன. 1985-ம் ஆண்டு வரை பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளே செயல்பட்டு வந்தன. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவது கடினம். தொலைநோக்குப் பார்வையுடன் என்.பி.வி.ராமசாமி உடையார் இந்த மருத்துவக் கல்வி மையத்தை தொடங்கியுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி தேவை என்பதை உணர்ந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார். திறமையுடன் மனிதாபிமானம், அர்ப்பணிப்பு உணர்வுள்ள டாக்டர்களை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் 10 ஆயிரம் பேருக்கு 20 டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 6 டாக்டர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்தியாவில் 10.5 லட்சம் டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 6.5 லட்சம் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். நிலையான ஆளுநர் விழா முடிவில் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ''யாராக இருந்தாலும் முதலில் அவரவர் தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. படிக்கும்போதே ஆங்கில மொழிய கற்றுக் கொள்கிறோம். இந்தியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு விரைவில் நிலையான ஆளுநர் நியமிக்கப்படுவார்'' என்றார்.

No comments:

Post a Comment