வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, April 11, 2017

உங்க ஜியோ சிம் போஸ்ட்பெய்டா... ப்ரீபெய்டா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! #RelianceJio


"சொல்லுங்க பாஸ்...உங்களோட ஜியோ சிம் போஸ்ட்பெய்டா? ப்ரீபெய்டா?" ஜியோ இன்டர்நெட் யூஸ் பண்ணி மொபைலில் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட இதற்குப் பதில் தெரியாது. ஆனால் நீங்கள் நிஜமாகவே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்
இது. http://tz.ucweb.com/4_UZiA

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது 4G சேவையான ஜியோவைத் தொடங்கியது முதலே அதற்கு அதிர்ஷ்டம்தான். இலவச 4G இன்டர்நெட், இலவச கால், இலவச ஜியோ டிவி போன்ற கவர்ச்சிகரமான சேவைகளால் அதிரடியாக வாடிக்கையாளர்களை சம்பாதித்தது. முதல் மூன்று மாதங்கள் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அறிவித்த இலவச சேவைகளை இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்தது ஜியோ. பின்னர் தனது இலவச சேவைகளை நிறுத்திக்கொண்டு ஜியோ ப்ரைம் உள்ளிட்ட கட்டண வசதிகளை அறிவித்தது. பிறகு ரூ.303 உள்பட பல்வேறு கட்டண விவரங்கள் கொண்ட தெளிவான பட்டியலையும் வெளியிட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்குப் பின்னர்தான் பலரும் தங்கள் முதல் ஜியோ ரீசார்ஜை செய்தனர். இதற்கு பிறகும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் என, கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு எனத்தனியாக இலவச சேவைகளை அறிவித்தது. ஆனால் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் இந்தத் திட்டத்திற்கு குட்டு வைக்கவே, இதனை உடனடியாக நிறுத்திக்கொண்டது ஜியோ. தற்போது மீண்டும் புதிய கட்டண விவரங்களைப் பற்றி அறிவித்துள்ளது. இதுவரை நீங்கள் படித்தது அனைத்தும் இதுவரை ஜியோ அளித்த சலுகைகள் பற்றியது. ஆனால் இனி படிக்கப்போவது ஜியோவின் 'தில்லாலங்கடி' பற்றியது.

கடந்த ஆறு மாதங்களாகவே ஜியோ சிம் மற்றும் இன்டர்நெட் டாங்கிள்கள் வாங்கிய அனைவருமே அது போஸ்ட்பெய்டா அல்லது ப்ரீபெய்டா என்று தெரிந்துகொண்டு வாங்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஜியோ சிம் விற்பனைக்கு வந்து சில நாட்களில் சிம் கிடைக்கவே தட்டுப்பாடு இருந்தநிலையில் பலரும் 'ஒரு ஜியோ சிம் கிடைத்தாலே போதும்' என்று நினைத்துதான் வாங்கினர். மேலும் ஜியோ சிம் கடைகள் மற்றும் டீலர்களிடம் சிம் பெறும்போது அவர்கள் சொன்னது, "இதுவரை இந்த சிம் போஸ்ட்பெய்ட் அல்லது ப்ரீபெய்ட் என பிரிக்கப்படவில்லை. மூன்று மாதங்கள் இலவச சேவைகள் முடிந்தபின்பு வாடிக்கையாளர்களே தங்கள் வசதிக்கேற்ப, போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் சேவைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்" எனக் கூறினர். இதுதான் சிம் வாங்கிய பலரிடம் தெரிவிக்கப்பட்ட கருத்து. ஆனால் தற்போது நிலைமையோ வேறாக இருக்கிறது. தற்போது பலரின் சிம் கார்டுகளும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டாக மாறியிருப்பதாக, ஜியோவின் இணையதளம் மற்றும் ஆப்பில் குறிப்பிடப்படுகிறது. போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் விவகாரங்கள் குறித்து ஜியோ இதுவரை எந்தவொரு விஷயத்தையும் கூறவில்லை. பெரும்பாலானோர் தங்கள் சிம் மற்றும் ஜியோ டாங்கிள் ஆனது ப்ரீபெய்ட் என்று நினைத்தே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நிஜமாகப் பார்த்தால் பலரின் ஜியோ எண்கள் போஸ்ட்பெய்டாக காட்டப்படுகிறது. இதுவரை ஜியோ இதுகுறித்து வாடிக்கையாளர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காத நிலையில், எப்படி இப்படிக் குறிப்பிடப்படுகிறது என்பது குறித்த சந்தேகங்கள் எழுகின்றன.

இதுவரை ஜியோ ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் என முடிவு செய்யப்படவில்லை எனில் எப்படி இவ்வாறு காட்டப்படுகிறது? இத்தனை கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ எப்படி இதனை முடிவு செய்கிறது?
உங்கள் சிம் போஸ்ட்பெய்டா அல்லது ப்ரீபெய்டா என்பதை எப்படி பார்ப்பது?
ஜியோவின் மை ஜியோ ஆப்பில் லாக்-இன் செய்து, உங்கள் போன் எண்ணைக் க்ளிக் செய்வதன் மூலமாவே இதனைப் பார்க்க முடியும். ஜியோவின் இணையதளத்தில் உங்கள் கணக்கை கொடுத்து லாக்-இன் செய்வதன் மூலமாகவும் உங்கள் எண் போஸ்ட்பெய்டா அல்லது ப்ரீபெய்டா என்பதனைப் பார்க்க முடியும். எப்படி ஜியோ நிறுவனம் இந்த விஷயத்தை முடிவு செய்கிறது என்பது குறித்து ஜியோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மின்னஞ்சல் செய்தோம். இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. அவர்கள் தரப்பில் இதுகுறித்து விளக்கம் தரப்பட்டால் அதையும் இணைத்து பிரசுரிக்க தயாராக உள்ளோம்.

No comments:

Post a Comment