வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, April 18, 2017

ஆதார் அட்டையில் திருத்தம் பணி துவக்கம்

தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் அட்டை விபரங்களை திருத்தும் பணி நேற்று துவங்கியது.



தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், மாநிலம் முழுவதும், 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை நிர்வகித்து வருகிறது. ஆதார் எண் பெற்றவர்கள், தங்கள் அட்டையில் உள்ள விபரங்களை, இந்த மையங்களில், திருத்தம் செய்யும் வசதி நேற்று துவங்கியது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், 'இ - மெயில்' முகவரி
ஆகியவற்றை திருத்தம் செய்யலாம். புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி போன்றவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஐந்து முதல், ௧௫ வயதுடையோர் வரை, கட்டாய கைவிரல் ரேகை மறு பதிவு செய்தல் போன்றவற்றுக்கு கட்டணமில்லை. திருத்தம் செய்ய, புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க, 25 ரூபாய்; ஆதார் விபரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்ள, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் தவறாமல், ஒப்புகை சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர், கட்டணமில்லாத தொலைபேசி எண், 180042 52911ஐ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment