வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, April 30, 2017

மருத்துவ செலவுக்கு பிஎப் பணத்தை எடுக்கலாம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்

மருத்துவ செலவுக்கு பிஎப் பணத்தை எடுக்கலாம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல் | வருங்கால வைப்பு நிதியில் சேமிக் கப்படும் தொகையை, அவசர கால மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிஎப் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுய விருப்ப படிவம் கொடுத்து இந்த தொகையை எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பினை கடந்த 25-ம் தேதி தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் அனுமதி மற்றும் மருத்துவ அறிக்கை ஆகிய தகவல்கள் ஏதும் இல்லாமல் மருத்துவ செலவுகளுக்கு பிஎப் சேமிப்பில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும் என பிஎப் ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்தார். புற்றுநோய், காசநோய், தொழுநோய், பக்கவாதம், இதய சிகிச்சை மற்றும் ஒரு மாத அளவில் சிகிச்சை தேவைப்படும் சமயத்தில் பணியாளர்களின் பிஎப் கணக்கில் இருந்து அதிகபட்சம் ஆறு மாத சம்பள தொகையை கூட எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, மாநில காப்பீட்டு திட்டத்தில் இல்லை என நிறுவனத்தின் சான்றிதழ் மற்றும் நோய் குறித்த தகவல்களுடன் மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும் என்னும் விதி இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பிஎப் தொகையில் இருந்து பணம் எடுப்பதை பிஎப் அமைப்பு மிகவும் எளிமையாக்கியது. ஒரு பக்க படிவம் அறிமுகம் செய்யப்பட்டது. பிஎப் தொகையில் இருந்து பணம் எடுக்கும்போது அதற்குத் தேவையான ஆவணங்களை (உதாரணத்துக்கு குழந்தைகளின் கல்வி, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட சான்றிதழ்கள் சமர்ப் பிக்க தேவையில்லை என அறிவித்தது. அதற்கு முன்னர் ஒவ்வொரு விதமான தேவைக்கும் வெவ்வேறு படிவங்களை நிரப்பி பிஎப் சேமிப்பு தொகையில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment