வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, April 16, 2017

இணையவசதி இல்லாதவர்களுக்காக ‘நீட்’ மாதிரி தேர்வு வினாத்தாள்களை இலவசமாக அனுப்புகிறது ‘லிம்ரா': பெயர், முகவரியை எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும்.

  1. இணையவசதி பெற இயலாத மாணவ, மாணவிகளுக்கு நீட் மாடல் தேர்வுக்கான முழுமையான வினாத்தாள்கள் அவர்களது வீட்டுக்கே கூரியர் மூலம் இலவசமாக அனுப்பப்படும் என்று ‘லிம்ரா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
  2. ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஞாயிறுதோறும் ‘நீட்’ மாதிரி வினாத்தாள், சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இயற்பியல் பாட மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டது. அடுத்த வினாத்தாள் எந்தப் பாடத்தில் தரப்படும் என பல மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர்.ஏப்ரல் 16-ம் தேதி (இன்று) வேதியியல் பாட வினாத்தாள், அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) உயிரியல் பாட வினாத்தாள் வெளியிடப்படுகின்றன.

வினாத்தாளுடன், அந்தப் பாடங்களில் முக்கிய பாடப் பிரிவுகள் குறித்த டிப்ஸும் வழங்கப்படுகின்றன. இந்தப் பாடப் பிரிவுகளில், எந்தப் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதற்கு பதில் எழுதி அதிகபட்ச மதிப்பெண்கள் வாங்குவது குறித்த குறிப்புகளும் தரப்படுகின்றன.இந்த வினாத்தாள்கள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைநடத்துவதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. ‘லிம்ரா’ நிறுவனத்தின் இணையதளத்தில் (www.neetlive.in) 15-க்கும் மேற்பட்ட முழுமையான வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன.

  1. இணையவசதி பெற இயலாத மாணவ, மாணவிகளுக்கு நீட் மாடல் தேர்வுக்கான முழுமையான வினாத்தாள்களை அவர்களது வீட்டுக்கே கூரியர் மூலம் எந்தவிதக் கட்டணமும் இன்றி ‘லிம்ரா’ நிறுவனம் அனுப்புகிறது. இதற்கு மாணவர்கள் தங்கள் பெயர், தெளிவான முகவரியை பின்கோடு எண்ணுடன் தங்களது செல்போனில் டைப் செய்து 9952922333/ 9444614353 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பும் அனைவருக்கும் மாடல் தேர்வுவினாத்தாள்கள் அனுப்பப் படும் என்று ‘லிம்ரா' நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment