வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, May 2, 2017

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயங்குவதோடு பல சலுகைகளை தற்ப்போது அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பைபர் (எப்டிடிஇ) என்ற அகல அலைவரிசை சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.


தற்போது வரும் ஜியோ பைபர் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பைபர் முன்னோட்டம்: இந்த ஜியோ பைபர்(எப்டிடிஇ) முன்னோட்டம் வரவிருக்கும் வரவிருக்கும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம்


பிராட்பேண்ட்: பைபர் பிராட்பேண்ட் 1ஜிபி பிஎஸ் வரை வழங்கப்படும் மேலும் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் மும்பையில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின் புனேவில் தொடங்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

வலைதளம்: தற்போது ஜியோ பைபர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லை கூடிய விரைவில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 4ஜி சேவையை பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப் படுகின்றன.

இணையப் பயனர்கள்: இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் இணையப் பயனர்கள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் 2 ஜி, 3 ஜி, மற்றும் 4ஜி போன்ற வயர்லெஸ் இணைப்புகளைபப் பயன்படுத்துகின்றனர். மேலும் கம்பி இணைப்புகளில் எசிடி மற்றும் ஐஎஸ்பி-களின் வருகையின் காரணமாக சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.

ஜியோ பைபர் தாக்கம்: ஏர்டெல் சமீபத்தில் வி-பைபர் அறிமுகத்தை அறிவித்தது, இதனால் மிகப் பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டது. மேலும் இதன் வேகம் 100 எம்பிபிஎஸ் அளவிற்க்கு முதலிடத்தில் உள்ளது. மேலும் தற்போது வரும் ஜியோ பைபர் மிகப் பெரியஅளிவற்க்கு வேகம் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு ஏர்டெல்க்கு போட்டியாக வரவுள்ளது.

No comments:

Post a Comment