வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, May 10, 2017

முதுகுதண்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது !!

*முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்.*

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க பத்து யோசனைகள்:-

🍁 தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)

🍁 தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

🍁 அமரும்போது வளையாதீர்கள்.

🍁 ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.


🍁 நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

🍁 சுருண்டு படுக்காதீர்கள்.

🍁 கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.

🍁 டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.

🍁 பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.

🍁 காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்

 *வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment