வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Friday, June 23, 2017


8 × 3 = 23

ஒரு இண்டர்வியூல ஒருத்தன் கிட்ட எட்டை மூன்றால் பெருக்கினால் என்ன விடை வரும்னு கேட்டாங்களாம்..
அவன் 23 என்று சொன்னதால் அவனைதான் செலக்ட் செய்தாங்களாம்.

அவனுக்கு இதை பற்றி
தெறிஞ்சுக்க ஆசை.. ஆனால் இப்ப சொன்னா வேலை போய்டுமே என்று சில மாதம் வேலை செய்த பின் மேலாளரை அணுகி, " சார் 8 × 3 = 24 தானே? நான் 23 என்று சொன்னேன்.. ஒருவேளை தெரியாம வேலை கொடுத்துடிங்களோ.... எப்படி என்று கேட்டானாம்...

மேலாளர் அப்படியெல்லாம் இல்லப்பா... அன்னைக்கு நிறைய பேர் நேர்முக தேர்வுக்கு வந்து இருந்தாங்க. எல்லார்கிட்டவும் இந்த கேள்விய கேட்டோம் வந்தவங்களிலயே நீதான் Nearest correct answer "நியரஸ்ட் கரெக்ட் ஆன்ஸர்" (நெருக்கமான பதில்) சொன்ன என்று சொன்னாராம்.

இதுல பெரிய வாழ்க்கை தத்துவமமே அடங்கியிருக்கு.
குறையே இல்லாமல் உலகத்துல 100க்கு நூறு பர்பெக்ட் என்று யாரும் இல்லை.. மனிதன் குறைகளையும் நிறைகளையும் உடையவன்.

யார் ஒருவர் 100 பர்செண்ட் பர்பெக்ட் எதிர்பார்க்குறாங்களோ அவங்க கொஞ்சம் டென்ஷனும், எரிச்சலுடன்தான் வாழ்க்கையை கழிக்க நேரிடும். ஏனென்றால் அவர் எதிர்பார்ப்புக்கு தக்கபடி யாரும் இருக்க போவது இல்லை.

நாம் பல விஷயங்களில் நியரஸ்ட் கரெக்ட் ஆண்சர்களை ஒப்புக்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு எல்லாவற்றிலும் நியரஸ்ட் ஆன்சரை மட்டுமே பாருங்கள்.

அதே நேரம், இது எல்லா நேரத்திற்க்கும் பொருந்தாது.. ஒரு ரயிலை இயக்குபவர், சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடம் கடக்க வேண்டும், கடந்துதான் ஆகவேண்டும்.. அப்பொழுது தான் அடுத்து வரும் ரயில் இதன் மீது மோதாமல் விபத்தின்றி செல்ல முடியும்.
உதாரணமாக: அழகான வாழ்க்கை துணை வேண்டும் என்பதில் நியரஸ்ட் கரெக்ட் ஆன்ஸரையும்; அவர் அன்பானவராக இருக்க வேண்டும் என்பதில் பர்பெக்ட் ஆன்ஸர்ரையும் எதிர் பாருங்கள்.

 தேர்தலில், பர்பெக்ட் தலைவருக்குதான் ஓட்டு போடுவேன் என்று அடம் பிடித்தால், நாம் என்றைக்கும் ஓட்டு போட முடியாது.. இருப்பவர்களில் ஒரு நியரஸ்ட் கரெக்ட் தலைவரை தேர்ந்து எடுத்து வாக்களியுங்கள்...

No comments:

Post a Comment