வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, July 27, 2017


தைராய்டு பிரச்னை :

நம்மில் பலருக்கும் சுலபமாக வந்து விடுகிறது தைராய்டு பிரச்னை .இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இதிலிருந்து விடுபட, பல இயற்கை வழிகள் உள்ளது

தூதுவளை சூப்

தேவையானவை:


நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப்,

பெரிய வெங்காயம் - 1,

பூண்டு பல் - 5,

மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,

பச்சைமிளகாய் - 2, தக்காளி - 3,

தேங்காய்ப் பால் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு,

கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும் . இந்த சூப் செய்து தினமும் அருந்தி வந்தால், தைராய்டு பிரச்னை விரைவில் நீங்கும் 

No comments:

Post a Comment