வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, August 1, 2017


பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான TNTET லிருந்து முழு விலக்கு தொடர்பான அரசாணை தமிழக அரசு விரைவில் வெளிவிடும்" என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை.

23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் சுமார் ஒன்பதாயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் வெளிவந்தது.
 RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.

ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் TET கட்டாயம் ஆக்கப்படுதல் தொடர்பான 28/03/2012 தேதியிட்ட அரசாணை எண் 90 சற்றே தாமதமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட பள்ளிகள் வழியாக ஆசிரியர்களுக்கும் பகிரப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் நான்கு TET தேர்வுகள் முறையே நடத்தப்பட்டன.
இந்த இடைப்பட்ட காலங்களில் நீதிமன்றங்கள் வாயிலாக பல ஆசிரியர்கள் TET லிருந்து முழு விலக்கு பெற்றனர்.அவர்களில்

1) 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்றவர்கள்


2) 15/11/2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள்

3) அனைத்து வகை சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள்

-- உள்ளிட்ட 90% ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு கொடுக்கப்பட்டு விட்டன.

தற்போது மிகக் குறைந்த அளவிலான (சுமார் 10%) TET நிபந்தனை ஆசிரியர்கள் மட்டுமே தமிழகத்தில் மீதம் உள்ளனர். இவர்களின் பெரும்பாலான ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியலில் இருந்து பணி நியமனம் பெற்றவர்கள்.

இவர்களின் TET முழு விலக்கு தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்து இருந்தனர்.

பல்வேறு ஊடகங்கள் இவர்களின் துயரங்களை எடுத்துக் காட்டின.

இந்த நிலைக்கு தீர்வு கேட்டு பல முறை தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகளை விடுத்தனர்.

இந்நிலையில் கடைசியாக TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை ஈரோடு மாவட்டம் சென்று மனு கொடுத்து உள்ளனர். அப்போது இது சார்ந்த கோப்புகள் ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வழி செய்யப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளரூதியம், ஊக்க ஊதியம், பணிப்பதிவேடு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு தடைகளுக்கும் நிரந்தர தீர்வு இதன் மூலமாக கிடைக்கும் மேலும் இந்த பிரச்சினை தொடர்பான நீதிமன்ற அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.


மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் விரைவில் இந்த TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது

என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment