வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, October 25, 2017

தேனி மாவட்ட அளவிலானதுளிர் அறிவியல் வினாடி வினா




 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (அக்.25) மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா தேனி -கொடுவிலார்பட்டி கம்மவார் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் போட்டிகளைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 30 குழுக்கள் கலந்து கொண்டன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், விளையாட்டு, பொது அறிவு ஆகிய சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.

4,5 வகுப்புகளுக்கான பிரிவில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 6,7,8 வகுப்புகளுக்கான பிரிவில் அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன..

9,10 வகுப்புகளுக்கான பிரிவில் லட்சுமிபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் நல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 11,12 வகுப்புகளுக்கான பிரிவில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.

வெற்றி பெற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளை கம்மவார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் வழங்கினார். மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட நிர்வாகிகள் வி.வெங்கட்ராமன், ஆர்.அம்மையப்பன், ஜி.பாண்டியன், தாழைக்குமரன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். வினாடிவினா போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராம்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment