வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, October 4, 2017

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி? ஆசிரியர்களுக்கு கையேடு அறிமுகமாகிறது தமிழக அரசு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில்,மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை

ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது.




 அடுத்த கல்வியாண்டு முதல்பாடங்கள் நடத்தும்போதுஇந்த கையேட்டின்அடிப்படையில்ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும்இந்த கையேட்டில்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படிஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்குகற்பிக்க வேண்டும்வரலாறுகணிதம்அறிவியல்ஆங்கிலம்தமிழ் எனஅனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும்.

இது குறித்து மாநில பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர்கூறுகையில், “ அடுத்த கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 9-ம்வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றனஇந்தபுதியபாடத்திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பதுகுறித்த கையேடு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்புதிய பாடத் திட்டங்களுக்குமாணவர்களை எவ்வாறு தயார் செய்வதுபுரியும் வகையில் எப்படி பாடங்களைநடத்துவதுபயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமானஆலோசனைகள்அறிவுரைகள் இந்த கையேட்டில் இருக்கும்” எனத்தெதரிவித்தார்.

மேலும்ஒவ்வொரு வகுப்பு வாரியாகவும்பாடங்கள் வாரியாகவும் அடுத்துவரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் கையேடு தரப்படும்இதன்மூலம்அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களைமாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுகிறது.இந்த கையேடு மாநிலவழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படிகற்பிக்க உதவியாக இருக்கும்.

பாடங்களை திட்டமிடல்வரைபடத்துடன் விளக்குதல்வகுப்புகளில் தேர்வுகள்நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் விதத்தில் கையேட்டில்குறிப்பிடப்பட்டு இருக்கும்உதாரணமாகஇயற்பியல் பாடத்தை பெயரளவுக்குநடத்திவிட்டு செல்லாமல்அதை தொழில்நுட்பரீதியாக புராஜெக்டர் மூலம்நடத்தும் போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்அவ்வாறு செய்வதுஎப்படி என்று கையேட்டில் தரப்பட்டு இருக்கும்.




2018, ஜனவரி மாதம் புதிய பாடத்திட்டங்களின் டிஜிட்டல் வரைவு தொகுப்புதயாராகிவிடும்அதன்பின்அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் புதியபாடத்திட்டங்களின் படி எப்படி பாடம் நடத்துவதுதங்களை எப்படி தயார்செய்து கொள்வதுகுறித்த ஒரு வார கால வகுப்புகள் நடத்தப்படும்அப்போதுஇந்த கையேடுகள்தரப்படும்இந்த கையோடுகள் கல்வித்துறையில்வல்லுனத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்டது என்பதால்ஆசிரியர்கள் திறன்மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும்பல்வேறு நவீன,புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment