வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, October 24, 2017

இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு!!

அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள்
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி
அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.



 மதுரை மாவட்டப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும்வகையில்முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார்.

அதில், “அனைத்துப் பள்ளிகளின் வளாகங்கள் தூய்மையாக வைக்கப்படவேண்டும்குடிநீர்த் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும்.

வாரந்தோறும் குடிநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தினுள் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.


வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தைவகுப்புஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலானமாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்துமாவட்ட முதன்மைக் கல்விஅலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர்மாவட்ட ஆட்சியர்திடீரென சோதனையிடலாம்அப்போதுதூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்குஅபராதமும் விதிக்கப்படும்.


எனவேஅனைத்துப் பள்ளிகளும் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கும்வகையில் செயல்பட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ள

No comments:

Post a Comment