*கட்டி தடுக்கவும்.*
*3.பள்ளியில் உள்ள மின்சாதனங்களை மாணவர்களைவிட்டு இயக்க சொல்லுதல் (மின்விசிறி போடுதல்,லைட் போடுதல்) செய்யவேண்டாம்.*
*4.பட்டு போன மரங்கள் பள்ளி அருகிலோ,பள்ளி வளாகத்திலோ இருந்தால் உடன் அப்புறப்படுத்தவும்.*
*5.குடிதண்ணீரை சத்துணவு பணியாளர் மூலம் காய்ச்சி வடிகட்டி மாணவர்களுக்கு அளிக்கவும்.*
*6.ஆறு,குளங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மாணவர்களை அவற்றில் குளிக்கச்செல்லவேண்டாம் என கண்டிப்பாக அறிவுறுத்தவும்.*
*7.மழை நேரத்தில மாணவர்களை குடை, ரெயின்கோட் கொண்டுவர அறிவுறுத்தவும்.*
*8.தலைமை ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு குடை,Torch light வாங்கி வைக்கவும்.*
*9.இயற்கை பேரிடர் நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு இடம் கேட்டால் (முக்கியஆவணங்கள்,பொருட்களை பத்திரமாக பீரோ அல்லது தலைமை ஆசிரியர் பொறுப்பில் வைத்துக்கொண்டு) உடன் தங்க அனுமதி அளிக்கவும்.*
*10.பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சார்ந்த மருத்துவமனை,மருத்துவ அலுவலர்,சுகாதாரச் செவிலியர்,காவல் நிலையம்,தீயணைப்பு நிலையம,கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருடைய கைப்பேசி எண்கள் கட்டாயம் பள்ளியில் எழுதியிருத்தல் வேண்டும்.*
*11.NCERT மூலம்"தமிழப்பள்ளி கலைத் திருவிழா "நடத்தப்படவுள்ளது*. *வட்டார அளவில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கும்,மாவட்ட அளவில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறும்.*
*1-2 வகுப்பு 3-5வகுப்புகள்*
*6-8 வகுப்புகள் என்ற நிலையில் போட்டிகள் நடத்தப்படும்.*
*12.பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாத நிலை (கழிவறை,குடிதண்ணீர்) இருந்தால் உடன் வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யவும்.*
*13.மாணவிகளுக்கு "நாப்கின்"தேவைப்படும் நடுநிலைப்பள்ளிகள் இருந்தால் உடன் மாணவிகள் எண்ணிக்கையை குறித்து அலுவலகத்தில் தபால் அனுப்பினால் சுகாதாரத்துறை உதவியுடன் பெற்று வழங்கப்படும்.*
*14.துப்புரவுப் பணியாளருக்கான ஊதியம் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடன் (வங்கி கணக்கை பார்க்கவும்) அதனை காசோலையாக தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு நேரடியாக வழங்கவும்*
*15.EMIS பதிவு செய்ய(போட்டோ&இரத்தப்பிரிவுடன்) கடைசி தேதி 31/10/17.*
*16.NAS தேர்வு நவம்பர் 13 நடைபெறும்.எட்டாம் வகுப்பிற்கு மட்டும் Coding sheet.*
*17.Team visit "A" கிரேடு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளுக்கும் இந்த மாத இறுதியில் உண்டு.*
*18.பள்ளிகளில் "மெல்லக் கற்போர் " பதிவேடு கண்டிப்பாக நடைமுறையில் இருத்தல் வேண்டும்.அதில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான மேற்கொள்ளளப்பட்ட செயல்பாடு "Remedy " குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.*
No comments:
Post a Comment