வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, January 18, 2018

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதுபோல 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை உள்ள பாடத்திட்டங்கள் 7 வருடங்களுக்கு முன்பாக மாற்றி அமைக்கப்பட்டது. பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வரும் கல்வி ஆண்டில் அமல்

1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக பல்வேறு கூட்டங்கள் நடத்தி எப்படி பட்ட பாடத்திட்டத்தை கொடுக் கலாம் என்று எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு முடிவு செய்தது.

இதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கருத்துகளில் தேவையானவை மற்றும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவித்தவற்றில் சிறந்த கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு புத்தக சுமை இருக்கக்கூடாது என்று கருதி பருவ முறையில் (ஒரு ஆண்டுக்கு 3 பருவமாக ) பாடப்புத்தகங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது.

பாடத்திட்டம் தயார்

முதல் கட்டமாக 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்பட 7 மொழிகளில் புதிய பாடத்திட்டம் தயாராகி வருகிறது. 1, 6, 9 வகுப்புகளில் முதல் பருவ பாடத்திட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டும் தயாரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்த பாடத்திட்டத்தில் மனப்பாடத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் புரிந்து கொண்டுபடிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிக அளவில் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆர்வத்துடன் படிப்பார்கள்

மொத்தத்தில், படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கும் விதமாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment