தேசிய அறிவியல் தினம்
28.02.18 அறிவியல் கண்காட்சி
டிரயம்ப் நடுநிலைப் பள்ளி
பெரியகுளம்
டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
திரு.அ.சதீஸ்குமார் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலும் நா.சம்பூர்ணப் பிரியா
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆசிரியர் திரு கார்த்திகேயன்
வரவேற்புரை நிகழ்த்தினார்.தலைமை ஆசிரியர் ராம்சங்கர் அறிவியல் கண்காட்சியின் நோக்கம்
,சர் சீ.வி.ராமன் பற்றியும் அறிவியல் மக்களுக்கே என்பது பற்றி சிறப்புரை ஆற்றினார்.
ரோபோ ,விவசாயமாற்றங்களும்மாயச்செடியும் ,கழிவுநீர் சுத்திகரிப்பு,
எதிரொளிப்பு விதிகள்,சித்த வைத்தியம்,புரொஜக்டர், வைகை அணை,பைசாநகர சாய்ந்தகோபுரம்,மின்
மாற்றியின் தத்துவம் நிறம் மாறும் நீர்,கோள்கள் இயக்கம்,வெப்ப உமிழ் வினைகள்,உட்பட
108 பொருட்கள் சிறப்பாக செய்தும் விரிவாக விளக்கியும் காட்டினர்.ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை
வழங்கினார்.இக் கண்காட்சியினை தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாவட்ட செயலர் திரு ஜெகன் தேனி
கிளை தலைவர் திரு தாழைக்குமார் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினார். இவ் விழாவில்
அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் ஒருங்கிணைத்தனர். ஆசிரியை திருமதி திலகவதி நன்றி கூறினார்கள்.நாட்டுப்
பண்ணுடன் கண்காட்சி இனிது நிறைவேறியது.

No comments:
Post a Comment