வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, March 18, 2018

புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்


             வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.வரும் கல்வி ஆண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக வாய்ப்புள்ளது.

பதவி உயர்வு, நேரடி நியமனம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண்

எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட் டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment