வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, March 19, 2020

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் நாள் வாரியான பட்டியல்  DEO வெளியீடு(திண்டிவனம்)

              பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைக்கிணங்க , விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அறிவித்து , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலகப்பணிகளை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே இணைப்பில் காணும் பட்டியலில் தெரிவித்துள்ளவாறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் இப்பணிகளை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனிக்குமாறும் , இப்பணியில் சுணக்கம் ஏதும் இன்றி பணியினை கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பணிகள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை இப்பணிகள் முடிந்தவுடன் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : பணிகள் சார்ந்த உரிய பட்டியல்

No comments:

Post a Comment