எட்டாம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகள் பாடம் 1 முதல் 6 முடிய
அளவீட்டியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?
அ)
CGS ஆ) MKS இ) FPS
ஈ)
SI விடை : இ ) FPS
2மின்னோட்டம் என்பது……. அளவு ஆகும்
அ) அடிப்படை ஆ) துணைநிலை இ) வழி ஈ) தொழில் சார்ந்த
விடை : அ) அடிப்படை
3.வெப்பநிலையின் SI அலகு ………………..
அ) செல்சியஸ்
ஆ) ஃபாரன்ஹீ ட் இ) கெல்வின் ஈ) ஆம்பியர் விடை : இ) கெல்வின்
4.ஒளிச்செறிவு என்பது………………… யின் ஒளிச்செறிவாகும்
அ) லேசர் ஒளி அ) புற ஊதாக் கதிரின் ஒளி இ) கண்ணுறு ஒளி ஈ) அகச் சிவப்பு கதிரின் ஒளி
விடை :இ) கண்ணுறு ஒளி
5.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள் நெருங்கி இருப்பது ……………….
அ) துல்லியம் ஆ) நுட்பம் இ) பிழை ஈ) தோராயம் விடை : ஆ) நுட்பம்
6.பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்
ஆ) தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது
இ) தோராயம் என்பது குறைவான தகவல்கள் மட்டும் உள்ள போது பயனுள்ளதாக அமைகிறது.
ஈ) தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக உள்ள மதிப்பினைத் தருகிறது.
விடை :அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1.திண்மக்கோணம்
ஸ்ட்ரேடியன் (Sr என்ற அலகில் அளக்கப்படுகிறது.
2.ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது வெப்பநிலை என குறிப்பிடப்படுகிறது.
3.மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி அம்மீட்டர் ஆகும்.
4.ஒரு மோல் என்பது 6.023 x 10+23
அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது
5.அளவீடுகளின் நிலையற்ற தன்மை பிழைகள் என அழைக்கப்படுகிறது.
6.அளவிடப்பட்ட மதிப்பு உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது துல்லியத்தன்மை
எனப்படும்.
7.இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் தளக்கோணம்
உருவாகிறது.
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
1.ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும்.
தவறு, சராசரி இயக்க ஆற்றல்
2.ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு நிமிடத்தில் பாயும் எனில், அது ஓர் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.
விடை :தவறு, வினாடி
3.ஒரு பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையே பொருளின் அளவாகும்.
விடை :சரி
4.ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்.
விடை :சரி
5.குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகின்றன.
விடை :தவறு, அணுக் கடிகாரங்கள்
6.4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58 விடை : சரி
IV. பொருத்துக.
1. வெப்பநிலை – அ) உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
2. தளக்கோணம் – ஆ) குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு
3. திண்மக்கோணம் – இ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை
4. துல்லியத் தன்மை – ஈ) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
5. நுட்பம் – உ) இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
விடைகள் :
ஆ) குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு
உ) இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
ஈ) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
அ) உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
இ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை
விசையும் அழுத்தமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1.ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
அ) நின்று விடும் ஆ) அதிக வேகத்தில் இயங்கும் இ) குறைந்த வேகத்தில் இயங்கும்
ஈ) வேறு திசையில் இயங்கும்
விடை :இ) குறைந்த வேகத்தில் இயங்கும்
2.திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?
அ) திரவத்தின் அடர்த்தி ஆ) திரவத்தம்ப உயரம் இ) அ மற்றும் ஆஈ) மேற்கண்ட எதுவுமில்லைவிடை : இ) அ மற்றும் ஆ
3.அழுத்தத்தின் அலகு
அ) பாஸ்கல்
ஆ) Nm-2 இ) பாய்ஸ் ஈ) அ மற்றும் ஆ விடை : ஈ) அ மற்றும் ஆ
4.கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
அ)
76 செ.மீ பாதரசத் தம்பம் ஆ) 760 செ.மீ பாதரசத் தம்பம்
இ)
176 செ.மீ பாதரசத் தம்பம் ஈ) 7.6 செ.மீ பாதரசத் தம்பம்
விடை :அ) 76 செ.மீ பாதரசத் தம்பம்
5.பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது
அ) நீரியல் உயர்த்தி ஆ) தடை செலுத்தி (பிரேக்)இ) அழுத்தப்பட்ட பொதி
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை :ஈ) மேற்கண்ட அனைத்தும்
6.கீழ்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
அ) கிரீஸ்
ஆ) நீர் இ) தேங்காய் எண்ணெய் ஈ) நெய் விடை :ஈ) நெய்
7.பாகுநிலையின் அலகு
அ)
Nm2 அ ஆ) பாய்ஸ்
இ) kgms-1 ஈ) அலகு இல்லை விடை : ஆ) பாய்ஸ்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் அதிகரிக்கும்
2.நீரியல் உயர்த்தி பாஸ்கல் விதி. விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
3.தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம்….. என்ற திரவப் பண்பே ஆகும்.
விடை :பரப்பு இழுவிசை
4.எளிய பாதரசமானி முதன் முதலில் ……. என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை :டாரிசெல்லி
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
1.
கொடுக்கப்பட்ட பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் எனப்படும். பா
விடை :சரி
2.இயங்கும் பொருள் உராய்வின் காரணமாக ஓய்வு நிலைக்கு வருகிறது.
விடை :தவறு
3.ஒரு பொருளின் எடை மிதப்பு விசையை விட அதிகமாக இருந்தால் அப்பொருள் மூழ்கும்.
விடை :சரி
4.ஒருவளிமண்டல அழுத்தம் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பின் மீது செயல்படும் 100000 நியூட்டன் விசைக்குச் சமம் விடை :சரி
5.உருளும் உராய்வு நழுவு உராய்வைவிட சற்று அதிகமாக இருக்கும்.
விடை :தவறு – குறைவாக
6.ஆற்றல் இழப்பிற்கு உராய்வு மட்டுமே காரணம். விடை : தவறு, உராய்வும் ஒரு காரணம்
7.ஆழம் குறையும் போது திரவ அழுத்தம் குறையும். விடை :சரி
8.பாகுநிலை திரவத்தின் அழுத்தத்தைச் சார்ந்தது. விடை : தவறு, உராய்வுவிசை
IV. பொருத்துக
அ )
தொகுதி I
— தொகுதி
II
1. நிலை உராய்வு — அ பாகுநிலை
2. இயக்க உராய்வு — ஆ. குறைந்த உராய்வு
3. உருளும் உராய்வு — இ. பொருள்கள் இயக்கத்தில் உள்ளன
4 திரவ அடுக்குகளுக்கு — ஈ. பொருள்கள் நழுவுகின்றன
5. நழுவு உராய்வு — உ. பொருள்கள் ஓய்வுநிலையில் உள்ளன
விடைகள்
உ. பொருள்கள் ஒய்வுநிலையில் உள்ளன
ஈ. பொருள்கள் இயக்கத்தில் உள்ள
ஆ. குறைந்த உராய்வு
அ. பாகுநிலை
ஈ. பொருள்கள் நழுவுகின்றன
ஆ) தொகுதி I — தொகுதி II
1. பாதரசமானி — அ. உராய்வை நீக்கும்
2. தொடு பரப்பை அதிகரித்தல் — ஆ. வளிமண்டல அழுத்தம்
3. தொடு பரப்பைக் குறைத்தல் — இ. உராய்விற்கான காரணம்
4. உயவுப் பொருள்கள் — ஈ. உராய்வை அதிகரிக்கும்
5. ஒழுங்கற்ற பரப்பு — உ. உராய்வைக் குறைக்கும்
விடைகள் –
ஆ. வளிமண்டல அழுத்தம்
ஈ. உராய்வை அதிகரிக்கும்
உ. உராய்வைக் குறைக்கும்
அ. உராய்வை நீக்கும்
இ. உராய்விற்கான காரணம்
. ஒப்பிட்டு விடை தருக
1.நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு : நிலை உராய்வு : :
பந்து தாங்கிகள் : ……….. உராய்வு
விடை :உருளும்
2.கீழ்நோக்கிய விசை : எடை : : திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : ……….
விடை :மிதத்தல்
3 ஒளியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்
அ) சமதள ஆடிகள் ஆ) சாதாரண ஆடிகள் இ) கோளக ஆடிகள் ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை :இ) கோளக ஆடிகள்
2.உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி
அ) குவி ஆடி ஆ) குழி ஆடி இ) வளைவு ஆடி ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை :ஆ) குழி ஆடி
3.வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி
அ) குழி ஆடி ஆ) குவி ஆடி இ) சமதள ஆடி ஈ) எதுவுமில்லை
விடை :ஆ) குவி ஆடி
4.ஒரு ஆழயின் ஆழமையத்தையும், வளைவுமையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு …….. எனப்படும்
அ) வளைவு மையம் ஆ) ஆடி மையம் இ) முதன்மை அச்சு ஈ) வளைவு ஆரம் 10
விடை :இ) முதன்மை அச்சு
5.முதன்மைக் குவியத்திற்கும், ஆடிமையத்திற்கும் இடையே உள்ள தொலைவு……. என்று அழைக்கப்படுகிறது
அ) வளைவு நீளம் ஆ) குவிய தொலைவு இ) முதன்மை அச்சு ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை :ஆ) குவிய தொலைவு
6.ஒரு கோளக ஆடியின் குவிய தொலைவு 10 செ.மீ எனில், அதன் வளைவு ஆரம் ……..
அ)
10 செ.மீ ஆ) 5 செ.மீ இ) 20 செ.மீ ஈ) 15 செ.மீ
குவியத்தொலைவு = 10 செ.மீ
ஆரம்(R)
= 2 X குவியத்தொலைவு
= 2 x 10 = 20
செ.மீ
விடை :இ) 20 செ.மீ
7.பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள
இடம்
……..
அ) ஈறிலாத் தொலைவு ஆ) Fல் இ) F க்கும் P க்கும் இடையில் ஈ) Cல்
விடை :ஈ) Cல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1.அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி………………
விடை :குழி ஆடி
2.கோளக ஆடியின் வடிவியல் மையம் ……. எனப்படும்.
விடை :ஆடி மையம்
3.குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை ……….
விடை :நேரான மாய பிம்பம்
4.கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி ………
விடை :குழி ஆடி
5.ஒளிக்கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு ……….
விடை
:45°
6.இணையாக உள்ள இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை ……………………..
விடை :முடிவிலா எண்ணிக்கை
4 வெப்பம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.வெப்பம் என்பது ஒரு வகையான ……………………
அ) மின்னாற்றல்
ஆ) ஈர்ப்பு ஆற்றல் இ) வெப்ப ஆற்றல் ஈ) எதுமில்லை
விடை:இ) வெப்ப ஆற்றல்
2.ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?
அ) விரிவடைதல்
ஆ) வெப்பநிலை உயர்வு இ) நிலைமாற்றம் ஈ) அனைத்தும்
விடை:ஈ) அனைத்தும்
3.பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?
அ) திடப்பொருள்
ஆ) திரவப்பொருள்
இ) வாயுப்பொருள்
ஈ) அனைத்தும்
விடை:அ) திடப்பொருள்
4.திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும் போது, எது அதிக விரிவுக்கு உட்படும்? அ) திடப்பொருள்
ஆ) திரவப்பொருள் இ) வாயுப்பொருள் ஈ) அனைத்தும்
விடை:இ) வாயுப்பொருள்
5.திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு …………………. என்று பெயர்.
அ) பதங்கமாதல்
ஆ) குளிர்வித்தல்
இ) உறைதல்
ஈ) படிதல்
விடை:இ) உறைதல்
6.வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் …………………….. ல் நடைபெறும்.
அ) திடப்பொருள்
ஆ) திரவப்பொருள்
இ) வாயுப்பொருள் ஈ) அனைத்தும்
விடை:அ) திடப்பொருள்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1.கலோரிமீட்டர் என்ற சாதனம்_ ஐ அளக்கப் பயன்படுகிறது.
விடை:ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை
2.ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ………………. எனப்படும். விடை:1 கலோரி
3.வெப்பக் கட்டுப்படுத்தி என்பது ………………..ஐ மாறாமல் வைத்திருக்கிறது.விடை: வெப்பநிலை
4.வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு ……………………. என்று பெயர். விடை: குளிர்தல்
5.ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை ……………..
விடை: அதிகரிக்கும்
6.ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு …………. விடை: குறையும்
III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
1.ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. விடை:சரி
2.ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும். விடை:சரி
3.ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர்.
விடை: தவறு. பதங்கமாதல்
4.திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர்.
விடை:சரி
5.ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன் நிறையையும் உள்ளுறை வெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும். விடை: சரி
6.வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை வெளிப்புறத்தில் எதிரொளிக்கின்றன.
விடை:தவறு. உட்புறத்தில்
5 மின்னியல்
I.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
அ) எதிர் மின்னூட்டம் ஆ) நேர்மின்னூட்டம் இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம்
ஈ) எதுவுமில்லை விடை : ஆ) நேர்மின்னூட்டம்
2.இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
அ) நியூட்ரான்கள் ஆ) புரோட்டான்கள் இ) எலக்ட்ரான்கள் ஈ) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
விடை:இ) எலக்ட்ரான்கள்
3.ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
அ) ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை ஆ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி
இ) ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி
விடை:ஈ) மின்கலம், மின்கம்பி, சாவி
4.ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலை மின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
அ) நேர் மின்னூட்டம் ஆ) எதிர் மின்னூட்டம் இ) அ மற்றும் ஆ ஈ) எதுவும் இல்லை
விடை:ஆ) எதிர் மின்னூட்டம்
5.மின் உருகி என்பது ஒரு
அ) சாவி ஆ) குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
இ) அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி விடை: ஈ) மின்சுற்றை தடைசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி
II.
கோடிட்ட இடத்தை நிரப்புக
1.பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது நடைபெறுகிறது.
விடை:மின்னூட்டத்தின் இடமாற்றம்
2.ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து ………………. ஆகிறது.விடை:நேர்மின்னோட்டம்
3.மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் ……………விடை:மின்னல் கடத்தி
4.அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க …………… அவற்றுடன் இணைக்கப்படுகின்றன. விடை: மின் உருகி
5.மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று ……………………… எனப்படும். விடை தொடரிணைப்பு
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
1.எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்கிறது. விடை:சரி
2.மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும் போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
விடை:சரி
3.தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.
விடை:தவறு. இருப்பதை கண்டறியும்
4.நீர் மின்சாரத்தைக் கடத்தும். விடை :சரி
5.பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.விடை:தவறு. மின்னழுத்தம்
IV. பொருத்துக
6 ஒலியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
அ) காற்று ஆ) உலோகங்கள் இ) வெற்றிடம் ஈ) திரவங்கள்
விடை:ஆ) உலோகங்கள்
2.பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?
i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு
அ) i மற்றும் ii ஆ) ii மற்றும் iii இ) iii மற்றும் iv ஈ) i மற்றும் ivவிடை:அ) i மற்றும் ii
3.ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது.
அ) வேகம் ஆ) சுருதி இ) உரப்பு ஈ) அதிர்வெண் விடை: இ) உரப்பு
4.சித்தார் எந்த வகையான இசைக்கருவி?
அ) கம்பிக்கருவி ஆ) தாள வாத்தியம் இ) காற்றுக் கருவி ஈ) இவை எதுவும் இல்லை
விடை:அ) கம்பிக்கருவி
5.பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
அ) ஹார்மோனியம் ஆ) புல்லாங்குழல்
இ) நாதஸ்வரம் ஈ) வயலின் விடை: ஈ) வயலின்
6.இரைச்சலை ஏற்படுத்துவது.
அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்ஆ) வழக்கமான அதிர்வுகள்
இ) ஒழங்கான மற்றும் சீரான அதிர்வுகள் ஈ) ஒழங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
விடை:ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்
7.மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு
அ) 2Hz முதல் 2000Hz வரை ஆ) 20Hz முதல் 2000Hz வரை இ) 20Hz முதல் 20000Hz வரை
ஈ) 200Hz முதல் 20000Hz வரை விடை: இ) 20Hz முதல் 20000Hz வரை
8.ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.
ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.
இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
விடை :அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்
9.இரைச்சலால் ஏற்படுவது எது?
அ) எரிச்சல் ஆ) மன அழுத்தம் இ) பதட்டம் ஈ) இவை அனைத்தும்விடை:ஈ) இவை அனைத்தும்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1.ஒலி …………….. ஆல் உருவாக்கப்படுகிறது.விடை:அதிர்வுகளால்
2.தனி ஊசலின் அதிர்வுகள் ……………… என்றும் அழைக்கப்படுகின்றன விடை:அலைவுகள்
3.ஒலி ……………… வடிவத்தில் பயணிக்கிறது.விடை:இயந்திர அலை
4.உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் . ….. மீயொலி
எனப்படுகின்றன.
5.ஒலியின் சுருதி அதிர்வுகளின் …………. ஐச் சார்ந்த து.விடை:வீச்சை
6.அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி விடை:
குறையும்
III. பொருத்துக
No comments:
Post a Comment