வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, June 26, 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"இதயநோயை தடுக்கும் ஓமேகா எண்ணெய்!"

பாஸ்ட்புட், அளவுக்கு அதிகமான நொறுக்குத் தீனி, என ஆரோக்கியமற்ற உணவுகளை இன்றைய இளைதலைமுறையினர் உட்கொள்கின்றனர். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்புகள் தேங்கி சிறு வயதிலேயே உடல் பருமன், இதயநோய் உள்ளிட்ட பல நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். நோயில் இருந்து உடலை பாதுகாக்க அளவிற்கு அதிகமான கொழுப்பு சத்து உடலில் சேருவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கொழுப்புச் சத்துக்கள் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. ஒரு கிராம் கொழுப்புச் சத்து நம் உடலுக்கு 9 கிராம் கலோரியை தருகிறது. இது கிட்டத்தட்ட, மாவுச்சத்து மற்றும் புரதம் அளிக்கும் கலோரி சக்தியை விட இருமடங்கு அதிகம். ஒரு கிராம் புரதம் (அ) மாவுச்சத்து தருவது 4 கலோரிகள் தான்.

கொழுப்புச் சத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட நாட்களாகவே உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து, ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி இதயத்தை தாக்கும் என்பது தற்போது நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவர கொழுப்புகளை விட விலங்கு கொழுப்புகள் ஆபத்தானது என்பது உண்மை. ஆனால் மீன்களிலிருந்து கிடைக்கும் ஓமேகா - 3 எண்ணை கொழுப்பு
உடலுக்கு நன்மை தரக்கூடியது.
கடலுணவுகளில் காணப்படும் ஒமேகா – 3 என்ற எண்ணை ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்த்து, ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. பல வழிகளில் இதயத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒமேகா எண்ணெய் வகைகள்
ஒமேகா எண்ணைகளான ஒமேகா – 3, ஒமேகா – 6,ஒமேகா – 9 கொழுப்பு அமிலங்கள் நம் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. உடல் நலத்தை பாதுகாக்க ஒமேகா – 3 மற்றும் ஒமேகா – 6 கொழுப்பு அமிங்களை கொண்ட எண்ணை மற்றும் இதர உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒமேகா – 3 கொழுப்பு அமிலமும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலமும் உணவில், 1 : 1 (அ) 1 : 4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்
ஆரோக்கியம் தரும் மீன்கள்
ஒமேகா – 3 செறிந்த உணவுகளில் முதன்மையானவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், மாக்கரல் வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா – 3 உள்ளது. இந்த வகை மீன்களை (வறுக்காமல்) உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது.
ஒமேகா – 3 பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் உள்ளது. குறிப்பாக சணல் விதை எண்ணை, வாதாம் கொட்டைகள், பசலைக்கீரை, பரங்கி விதைகள், சோயா பீன்ஸ், கோதுமை வித்து, கடுகு கீரை, இவைகளில் ஒமேகா – 3 நிறைந்துள்ளது. ஆளி விதைகள் ஆளி விதை எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. அதில் ஒமேகா−3 அதிகம் காணப்படுகிறது.
தினமும் 2 மேஜைக்கரண்டி பொடித்த சணல் விதைகளை சூப் (அ) பருப்புகளுடன் கலந்து சாப்பிடுவது நல்லது. வாரம் 3 முறை மீன்கள் உட்கொள்வது தேவையான அளவு ஒமேகா – 3 அமிலத்தை தரும்.
தானியங்கள், பருப்புகள்
சருமப் பாதுகாப்பு, முடி வளர்ச்சி, சீரான ரத்த ஒட்டம் இவற்றுக்கு உதவும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் முதலியன – தானியங்கள், முட்டை, கோழி, இறைச்சி, சோள எண்ணை, சூர்ய காந்தி, பருத்தி விதை, சோயா பீன் எண்ணைகளிலும் ஒமேகா – 6 அதிகம் காணப்படுகிறது. ஒமேகா – 9 அமிலங்களை நம் உடலே தயாரித்துக் கொள்ளும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்
நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை, செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. பக்கவாதம் வருவதை தடுக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன. மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும். மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கு பயன்படுகிறது.

No comments:

Post a Comment