வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, April 13, 2017

வங்கிக் கணக்குகளில் பான் எண் சேர்க்க ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு


வங்கிக் கணக்குகளில் பான் எண் சேர்க்க ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு | வங்கிக் கணக்குகளில் பான் எண்ணை சேர்க்க ஜூன் 30 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுப்பதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது
வங்கிக் கணக்கில் பான் எண் அல்லது படிவம்-60 ஐ இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டிருந் தது. இதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ம் தேதிவரை நீட்டித் துள்ளது. ஏற்கெனவே பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என வரித்துறை குறிப்பிட்டிருந்தது. அனைத்து விதமான பரிவர்த் தனைகளுக்கும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்றும் வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், கூட்டுறவு வங்கி களிடத்தில் வாடிக்கையாளர் களின் பான் எண் அல்லது வருமான விவரங்களைக் கோரும் படிவம்-60 ஐ வாங்க வேண்டும் என கூறியிருந்தது. புதிய கணக்கு தொடங்கவும் படிவம் 60 அவசியம் என குறிப்பிட்டிருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு பிறகு, 2016 ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிக்கும் டிசம்பர் 30ம் தேதிக்கும் இடையில் வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேலும் நடப்பு கணக்குகளில் ரூ.12.50 லட்சத்துக்கு மேலும் டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை வருமான வரித்துறை வங்கி களிடத்தில் கேட்டுள்ளது. அதே போல ஒரே நாளில் ரூ.50,000 டெபாசிட் செய்தவர்கள் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு பிறகு வங்கிகள் மூலம் ரூ.15 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப் பட்டுள்ளன என மதிப்பிடப் பட்டுள்ளது. வருமான வரித்துறை இந்த விவரங்களை ஆய்வு செய்து வருகிறது.

No comments:

Post a Comment