வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, April 13, 2017

‘நீட்’ தேர்வில் சமச்சீரான வாய்ப்புக்கு வழி உண்டு குஜராத் மாநில இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழகம் பின்பற்றுமா?


'நீட்' தேர்வில் சமச்சீரான வாய்ப்புக்கு வழி உண்டு குஜராத் மாநில இட ஒதுக்கீடு நடைமுறையை தமிழகம் பின்பற்றுமா? | 'நீட்' தேர்வு அடிப்படையிலான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க் கையில்,
தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கும் சமச் சீரான வாய்ப்பு அளிக்க வழி உள்ளது. குஜராத் மாநில அரசு பின்பற்றும் நடைமுறைகளை, தமிழகமும் பின்பற்றலாம் என்று கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். 'நீட்' தேர்விலிருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், பெரு வாரியான மாணவர்கள் 'நீட்' தேர் வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு தனியார் நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன. இது கிராமப்புற மற்றும் ஏழை மாண வர்களின் போட்டியிடும் தன்மையை வெகுவாக பாதிக்கிறது. வேறுபாடு அதிகம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்துக்கும், 'நீட்' தேர்வின் அடிப்படையாக இருக்கும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி வேதியியல் பாடத்தில் 211 பக்கங்கள், இயற்பியல் பாடத்தில் 44 பக்கங்கள், உயிரியல் பாடத் தில் 80 பக்கங்களை தமிழக பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 'நீட்' தேர்வுக்காக புதிதாக கற்க வேண்டியது உள்ளது. அவற்றைப் படிக்க மாணவர்களுக்கு போதிய காலஅவகாசமும் இல்லை. இவ்வாறு பல்வேறு காரணங் களைக் கருத்தில்கொண்டு தமிழ கத்தில் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி பாடத்திட் டங்களில் பயிலும் அனைத்து மாண வர்களுக்கும் சமச்சீரான வாய்ப்பை வழங்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் பின்பற்றிவரும் நடை முறையான PRO-RATA- Quota என்ற உள் ஒதுக்கீட்டு முறையை தமிழகத்திலும் பின்பற்றலாம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்து கின்றனர். இதுகுறித்து திருநெல் வேலியைச் சேர்ந்த கல்வியாளர் வி.ஜெயேந்திரன் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவ பட்டப் படிப்பில் மாநில அரசின் இடங்களான 85 சதவீத இடங்களை, மாநில பள்ளி பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை மற்றும் மத்திய கல்வி பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களின் எண்ணிக்கை அடிப்படை யில் PRO-RATA விகிதத்தில் நிரப்பப்படுகிறது. 2016-ல் நடந்தது என்ன? கடந்த 2016-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மருத்துவ பட்டப் படிப்புக்கான மொத்த இடங்கள் 1,080. அதில் அகில இந்திய ஒதுக்கீடு (15 சதவீதம்) இடங்கள் 162. மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் (85 சதவீத) இடங்கள்- 918. இந்த 918 இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர் களுக்கு (94 சதவீதம்) 872 இடங்களும், மத்திய பாடத்திட்டம் மற்றும் பிறபாடத்திட்ட மாணவர் களுக்கு (6 சதவீதம்) 46 இடங் களும் ஒதுக்கப்பட்டன. இந்த உள் ஒதுக்கீட்டு முறை கடந்த 10 ஆண்டுகளாக குஜராத் மாநில அரசில் நடைமுறையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகும் இந்த முறையை நீட்டிப்பதற்கான உத்தரவை குஜராத் அரசு, கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியிட்டது. இதற்கு சட்டத் திருத்தம் ஏதும் தேவையில்லை. சேர்க்கை விதிமுறை மாற்றம் மட்டுமே போதுமானதாக குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. "மருத்துவக் கல்லூரி சேர்க் கையில், இவ்வாண்டும் உள் ஒதுக் கீட்டு முறை அமல்படுத்தப்படும். இந்த ஒதுக்கீட்டு முறையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப் படையில் ரேங்க் பட்டியல் தயாரிக் கப்படும்'' என்று, குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரி வித்திருக்கிறார். எனவே, PRO-RATA- Quota என்ற முறை கொள்கைரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் 'நீட்' தேர்வு என்ற சுமை பெரிதாக இருக்காது. ஏனெனில், PRO-RATA- Quota முறையில் போட்டி என்பது அந்தந்த பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இடையே மட்டுமே இருக்கும். அந்தந்த பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், வேறு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுடன் ஒப்பீடு செய்யப் படுவதில்லை. எனவே, தமிழகத்தில் PRO-RATA- Quota முறையை மாநில பாடத் திட்ட மாணவர்களின் நலனைக் காக்கும்பொருட்டு அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் 'நீட்' தேர்வின் அடிப் படையில் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க தகுந்த விதி முறைகளை மாற்றி அமைத்து, அதை அரசாணையாக வெளியீடு செய்தும், சேர்க்கை அறிவிக் கையை வெளியிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment