வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, April 19, 2017


பள்ளிக் கல்விக்கு தனி இணையதளம்

அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை. 
இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்கடி 'அப்டேட்' செய்ய வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
google_language = "en"; google_ad_client = "ca-pub-7414990647107959"; google_ad_slot = "3037586228"; google_ad_width = 300; google_ad_height = 250; அதன்படி பள்ளிக்கல்வித்துறைக்கு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய தனி இணையதளம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட வாரியாக அனைத்து வித பள்ளிகளின் தகவல்களும் இடம்பெற உள்ளன. இதில் பள்ளிகளின் வரலாற்று சிறப்பு, விளையாட்டு சாதனை, தேர்ச்சி விகிதம், இதர சாதனைகள், இலக்கியம் போன்றவை இடம் பெறும். மேலும் அதுதொடர்பான படங்கள், வீடியோ தொகுப்புகளும் இருக்கும். இப்பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக உள்ளன. அப்பள்ளிகளின் பெருமைகள், மாணவர்களின் சாதனைகளை இணையதளத்தில் வெளியிடும்போது, மற்ற பள்ளிகளும் மாற வாய்ப்புள்ளது. மக்களிடம் அரசு பள்ளி மீதான தவறான கண்ணோட்டம் குறையும், என்றார்.

No comments:

Post a Comment