வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, April 19, 2017

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம் - முதல் முறையாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை TRB வெளியீடு மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் செய்தி தொகுப்பின் முழு விபரம் .





இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார். 
 முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை வெளி யிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலை மைச் செயலகத்தில் நிருபர்க ளுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், விரி வுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களைத் தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,390 பணி யிடங்கள் நிரப்பப்படும். எந்தெந்த பணிகளுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையை முதல்முறையாக வெளியிட்டுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.ஆசிரியர் நியமனம் வெளிப் படையான முறையில் இருக்கும். அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதை அனைவரும் அறிவர். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாண வர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுவதற்காக அவர்களுக்கு வழிகாட்டி முகாம்கள் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளோம். இதில் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர்.

ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகம்

இதுவரை தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்த ஆண்டு புதிதாக ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்பட்சத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் நிலை ஏற்படும். அந்த வகையில், தென் மாவட்டங்களில் பள்ளிகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். ஒன்று முதல் 6-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்தான் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்படும் இந்த அரசு, கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது.கல்வித்துறையானது இந்தி யாவுக்கே வழிகாட்டும் ஒரு துறையாக இருந்து வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் குறித்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப் படும். பாடத்திட்டத்தை மாற்று வது குறித்து முன்னாள் துணை வேந்தர்கள் உள்ளிட்டசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருக்கி றோம். நிச்சயம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டம் இருக்கும். ‘நீட்’ உள்ளிட்ட அகில இந்திய அளவி லான நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த அவர்களுக்கு அடுத்த ஆண்டி லிருந்து பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.உதயச் சந்திரன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment