ஃபெடரல் வங்கியில் கிளார்க் வேலை: 16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தனியார் வங்கியான ஃபெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி நிர்வாக செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Clerk
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540
வயதுவரம்பு: 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: கிளார்க் பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250. ஆபிசர் பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.350. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.federalbank.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.06.2017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2017
மேலும் விவரங்களுக்கு: https://www.federalbank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
No comments:
Post a Comment