கல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு நடுநிலைப் பள்ளிகளில், முதல் கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில், ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலும், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், ஒன்றிய மற்றும் நகராட்சி அளவில் பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கப்படும். எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment