அதிரடி! 5 மற்றும் 8ம் வகுப்புக்கு கட்டாய தேர்வு மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
புதுடில்லி:''இனி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும்தேர்ச்சியடைய செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்; ஐந்து மற்றும் எட்டாம்வகுப்புகளுக்கு, கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும்; இதற்கான மசோதா,
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துவருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை,நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பற்றி ராஜ்யசபா வில் நேற்று,உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி னர். இதற்கு பதில் அளித்து, மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ்ஜாவடேகர், எழுத்து மூலம் அளித்த பதில்:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுஉண்மை தான். தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது, அரசு பள்ளி களில்படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது.
அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதைத் தான்,பெற்றோர் விரும்புகின்றனர்; இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டியஅவசியமே இல்லை.
முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும்தேர்ச்சி பெற செய்யும் திட்டம், அரசு பள்ளிகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது.இதனால், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான்,
உண்மை யான தேர்வை சந்திக்கின்றனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன், அரசுபள்ளிகளில், மாணவர் கள் சேர்க்கை, 4 சதவீதம் குறைந்திருந்தது. ஆனால்,தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, 8 சதவீதம் அதிகரித்திருந் தது.இரண்டுமே கவலைக் குரிய விஷயம் தான். அரசு பள்ளிகளில், கல்வியின்தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்காக பல நடவடிக் கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, தமிழகம், உத்தர பிரதேசம்ஆகிய மாநிலங்களில், அரசுபள்ளிகளில் இருந்து, மாணவர்கள் வெளியேறுவதை தடுக்க, நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன; பாடத்திட்டங் களும் மாற்றப்பட்டுள்ளன. கல்வியின்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளிகளை, தனியாரிடம்ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
சமீபத்தில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத் தின் கூட்டம் நடந்தது. இதில், 'ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும், கட்டாய தேர்வு நடத்தப்படவேண்டும்; இதில் தேர்ச்சி பெற்றால் தான், அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்'என, பரிந்துரைக்கப் பட்டது; இதை அரசு ஏற்றுள்ளது.
ஐந்தாம் வகுப்பு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாத வர்களுக்கு, கல்வி பாதிக்காதவகையில், மே மாதத் திலேயே மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தவும்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மசோதா, பார்லிமென்டில்விரைவில் தாக்கல் செய் யப்படும். இந்த மசோதா நிறைவேற, அனைவரும்ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், இதைஅமல் படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுகளுக்கு இல்லை.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் கட்டாய தேர்வு நடத்துவது பற்றி,மாநில அரசுகளே முடிவு செய்யலாம். கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்என்பது தான், மத்திய அரசின் எண்ணம்; மாநில அரசின் உரிமைகளில்தலையிடும் எண்ணம், எங்களுக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர்கள் வரவேற்பு
மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, கல்வி ஆலோச கர் ஜெயப்பிரகாஷ் காந்திகூறியதாவது: எட்டாம் வகுப்பு வரை தேர்வு இன்றி, மாணவர்களை அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்யும் நடை முறை, தற்போது உள்ளது. இந்த முறையை, பல பள்ளிகளில், குறிப்பாக அரசு பள்ளிகளில் தவறாக பயன்படுத்தி விட்டனர். மாணவர் களுக்கு தேர்வே இல்லை என்பதால், சரியாக பாடம் நடத்தாமல், மாணவர்களை அடுத் தடுத்த வகுப்புகளுக்கு, 'பாஸ்' செய்தனர்.
அதனால், சில பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு, தமிழில் எழுத படிக்கவே தெரியாத நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கற்பித் தல் முறையின் உண்மையான நோக்கத்தை புரிய வைக்கும் வகையில், மதிப்பீடு அல்லது தேர்வு முறை கண்டிப்பாக தேவை.
அதே நேரம், தேர்வில் மிகவும் சிக்கலான கேள் விகள் இல்லாமல், அடிப்படையான அம்சங் களை வைத்து, வினாத்தாளை உருவாக்க லாம்; எனவே, மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மொழி திணிப்பு। இல்லை!
ராஜ்யசபாவில், மார்க்சிஸ்ட் எம்.பி., - கே.கே. ராகேஷ் எழுப்பிய பிரச்னைக்கு பதிலளிக்கை யில், ''நாடு முழுவதும் உள்ள சில பள்ளிகளில், சமஸ்கிருதம் மட்டும் கற்றுத் தரப்படுவதாக வும், பிராந்திய மொழிகள் கற்றுத் தரப்படுவ தில்லை என்பதும் தவறான தகவல்; யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட வில்லை,'' என, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்
No comments:
Post a Comment