அரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய்ப்பு!
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் கணக்கிட முடியாததாயிற்று. அதனால் எல்லோரிடம் அதன் தாக்கத்தைக் காணமுடிகிறது. மாணவர்களும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள். அதேபோல, தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்பிக்கும்போது கற்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA)மற்றும் Google நிறுவனம் இணைந்து Android செயலி உருவாக்கப் பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியானது சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலவாரியாக நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் அவர்களின் தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் பயிற்சியின் மூலம் ஆசிரியர்கள் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் திறன் பெறுவார்கள். அது கற்பிக்கும் முறையையும் மாற்றி அமைக்கும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்க்காணும் லிங்கில் உள்ள Google Form யை நிரப்பி அனுப்பவும்.
No comments:
Post a Comment