எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இருக்கவே இருக்கு மாற்று மருத்துவப் படிப்புகள்!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இருக்கவே இருக்குமாற்று மருத்துவப் படிப்புகள்! மருத்துவம், எத்தனையோ பேரின் கனவு,
லட்சியம். ஆனால், நீட் (NEET) தேர்வு, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவம்படிக்க விரும்பும் மாணவர்களை அல்லாடவைத்துவிட்டது என்பதே யதார்த்தம்.இந்த ஓர் ஆண்டுக்காவது நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்குவேண்டும் என்கிற குரல்கள் எழுந்திருக்கின்றன.
தமிழக அரசு இதற்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிறகோரிக்கையும் எழுந்துள்ளது. எம்.பி.பி.எஸ். (M.B.B.S.,), பி.டி.எஸ் (B.D.S)படிப்புகள் தவிர, மற்ற மருத்துவப் படிப்புகளுக்கும் அடுத்த ஆண்டில் இருந்துநீட் தேர்வு கட்டாயம் என்கிற நிலையும் உருவாகியிருக்கிறது.
மாற்று மருத்துவப் படிப்புகளான சித்த மருத்துவம், இயற்கை மற்றும் யோகா,ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, யுனானி ஆகியவற்றுக்கும் இன்றுமக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. இந்த இளநிலை மருத்துவப்படிப்புகள் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால்அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு இணையானவை. இந்தப்படிப்புகளை எங்கே படிக்கலாம், மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் உள்ளன,கல்லூரிகள் எங்கே இருக்கின்றன, எப்படி விண்ணப்பம் செய்வதுபோன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம்...
மருத்துவப் படிப்புகள்...
சித்த மருத்துவம் (B.S.M.S - Bachelor of Siddha Medicine and Surgery)
இயற்கை மற்றும் யோகா - (B.N.Y.S - Bachelor of Naturopathy and Yogic Science)
இந்த இரண்டையும், `தமிழ் மருத்துவப் படிப்புகள்' என்று சொல்வார்கள்.
ஆயுர்வேத மருத்துவம் - (B.A.M.S -Bachelor of Ayurvedic Medicine and Surgery) இதை, `இந்திய மருத்துவப் படிப்பு' என்பார்கள்.
ஹோமியோபதி - (B.H.M.S - Bachelor of Homeopathy and Surgery)இதை `ஜெர்மானிய மருத்துவப் படிப்பு' என்கிறார்கள்.
யுனானி - (B.U.M.S - Bachelor of Unani Medicine and Surgery) இதை`அராபிய மருத்துவப் படிப்பு' என்கிறார்கள்.
No comments:
Post a Comment