வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, July 31, 2017

ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்... வருகிறது அடுத்த செக்!

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன்இணைக்காதவர்களின் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய
அரசு தெரிவித்துள்ளதுபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்ககாலக்கெடு ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய வருவாய் செயலாளர் ஹஷ்முக் ஆதியா இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.தனி நபர்கள் வைத்திருக்கும் நிரந்தர வருமான வரி கணக்கு எண் என்றுசொல்லப்படும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.அப்படி ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும்.ஆதார் எண்ணை இணைப்பதற்கான கலாக்கெடு விரைவில் அறிவிக்கப்படும்என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆதார் எண்ணை பான்அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரைநீட்டித்துள்ளதுகுறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பான் அட்டைவைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கவேண்டியது கட்டாயமாகும்.

2017 - 18 நிதிக் கொள்கையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரிகணக்கு தாக்கல் செய்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தார்இதே போன்று ஆதார்எண்ணை கட்டாயம் பான் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும்கூறியிருந்தார்.

ஒரு நபரே பல பான் கார்டுகளை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவரி ஏய்ப்பு செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக இந்த திருத்தம்கொண்டு வரப்பட்டது.

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த உத்தரவில் வருமான வரி கணக்குதாக்கலுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று கூறியிருந்ததுஎனினும் இதைசெயல்படுத்துவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது.


நாட்டிலுள்ள 2 கோடி வரி செலுத்துவோர் ஆதார் எண்ணை பான் அட்டையுடன்இணைத்துள்ளனர்ஏறத்தாழ 25 கோடி பேரிடம் பான் அட்டைகள் உள்ளன,மொத்தம் 111 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகபுள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment