வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Friday, August 18, 2017

உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா?  உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?

உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக்

கொள்ளுங்கள்.


உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம்.

160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள்.


அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாககொடுக்க வேண்டும்.


190க்கு அடுத்து 2வதாக அறிவியல்


220க்கு அடுத்து 2 வதாக  கணிதம்

250க்கு அடுத்து 2 வதாக .அறிவியல்

280க்கு அடுத்து 2வதாக தமிழ்

310க்கு அடுத்து 2வதாக ஆங்கிலம்.


340க்கு அடுத்து 3வதாக அறிவியல்.

370க்கு அடுத்து 3வதாக கணிதம் .

400க்கு அடுத்து 3வதாக சமூக அறிவியல்

430க்கு அடுத்து 3 வதாக தமிழ்  

460க்கு அடுத்து 3வதாக ஆங்கிலம்

490க்கு அடுத்து 4வதாக அறிவியல்.

இப்போது பள்ளியில் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறார்களோஅத்தனை எண்ணிக்கையை பின்னால் இருந்து கழித்தம் செய்யவும்.

உதாரணமாக 3 பேர் என்றால் 1ஆங்கிலம்...,1தமிழ்,1சமூக அறிவியலை கழித்துவிடவேண்டும்.

அதே வேளையில் 6-8 மாணவர் எண்ணிக்கை 105 இருக்கிறதா எனபார்க்கவேண்டும்.அப்பொழுதுதான் அந்த 3 இடைநிலை ஆசிரியர்கள்தக்கவைக்க முடியும்.ஒரு வேளை 6-8 எண்ணிக்கை 70 பேர்தான் என்றால்பட்டதாரி எண்ணிக்கையை கழிக்காமல் 1 இடைநிலை ஆசிரியர் உபரி எனஅறிய வேண்டும்...

No comments:

Post a Comment