வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, September 25, 2017

'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களைமின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்'இணையதளம்ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின்விபரங்களைமின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்எனப்படும்கல்விமேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.


புதிய முகவரி


சென்னைஅண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன்பள்ளிக்கல்வித்துறையே, 'எமிஸ்இணையதளத்தை பராமரித்ததுதற்போதுஅந்த பொறுப்பு,தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளதுஇதையடுத்துபுதிய இணையதளமுகவரி தரப்பட்டுஅனைத்து பள்ளிகளும்இந்த இணையதளத்தைபயன்படுத்தலாம் எனகல்வித் துறை அறிவித்தது.


ஆனால்புதிய இணைய தளத்தில்தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுஏற்படுகிறதுஇரு நாட்களாகஇணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.

இது குறித்துஆசிரியர்கள் கூறியதாவது:'எமிஸ்திட்டத்தில்மாணவர் பெயர்,ரத்தப் பிரிவுபெற்றோர் விபரம்மொபைல் போன் எண்ஆதார் எண்வங்கிகணக்கு எண்குடும்ப உறுப்பினர் விபரம் எனபல தகவல்களை சேகரிக்கவேண்டும்ஏற்கனவே,2016-2017 வரைஇந்த தகவல்களை இணையதளத்தில்இணைத்துள்ளோம்.

அழுத்தம்


தற்போதுமீண்டும்புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்கபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதுஆனால்புதிய இணையதளம் மொத்தமாக முடங்கிஉள்ளது.


அதிகாரிகளோகால அவகாசம் கொடுத்துதகவல்களை பதிவேற்றம் செய்ய,அழுத்தம் தருகின்றனர்ஆனால்இணைய தள தொழில்நுட்பக் கோளாறு,இன்னும் சரி செய்யப்படவில்லை.


இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment