வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, December 11, 2017

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்



இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவேமேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன், அனைவருக்கும் கல்வித் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு செய்துள்ளோம்.

90 தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி:

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது.அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பர்.

ஆசிரியர்கள் மாணவர்களை எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர். புத்தகங்கள் - சி.டி.க்கள்... ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றனர்

No comments:

Post a Comment