வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, September 6, 2018

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்ஆசிரியர் தின கட்டுரை போட்டிக்கு அழைப்பு கடைசி தேதி 15.09.18)

      ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கு படைப்புகளை அனுப்பலாம்,''என, அதன் மாநில செயலாளர் தே.சுந்தர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் கட்டுரை போட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு போட்டிக்கு 6 முதல் 12 ம் வகுப்பு பள்ளி மாணவ , மாணவிகளுக்கு இது எங்கள் வகுப்பறை, கல்லுாரி மாணவர்களுக்கு என் கனவு , பள்ளி, கல்லுாரி
ஆசிரியர்களுக்கு கல்வியில் தொழில்நுட்பம், பொதுமக்கள், ஆர்வலர்களுக்கு அசத்தும் அரசு பள்ளி என்ற தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும்.
கட்டுரை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சொந்த படைப்புக்களாக, ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்பவேண்டிய நாள் :15.09.18
அனுப்ப வேண்டிய முகவரி தெய்வேந்திரன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், முல்லை நகர், அரண்மனைபுதுார், தேனி மாவட்டம். மேலும் விபரங்களுக்கு90808 25194 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

Post a Comment